சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg
அல்தாஜ் வரலாற்றின் முதல் தேசிய மட்டம் செல்லல்

அல்தாஜ் வரலாற்றின் முதல் தேசிய மட்டம் செல்லல்

தோப்பூர் கோட்டத்திற்குட்பட்ட ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் எம். முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட 100 மீட்டர் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்டம் தெரிவாகி  பாடசாலைக்கும், வலயத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே நீளம் பாய்தல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ் வரலாற்று சாதனையை பெற்று தந்த மாணவனுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

அதிபர் MM.நௌபீக் Sir அவர்களின் சிறப்பான நெறிப்படுத்தலின் , தலைமைத்துவத்தின் கீழ் மாணவனுக்கு பயிற்றுவித்து அழைத்துச் சென்றுள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆர்.றிபாய், சுகாதார பாட ஆசிரியர்களான U.தர்சா, M.S.M.I.ஜெம்சீல்,  வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள்  மற்றும் ஊக்கப்படுத்திய ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.